தந்திக்கு பதிலாக ரெலி மெயில் சேவை -அஞ்சல் திணைக்களம்

telemailதந்தி சேவை நிறுத்தப்படவுள்ளதால் அதற்குப் பதிலாக புதிதாக ரெலி மெயில் சேவையை அறிமுகப்படுத்த அஞ்சல் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இந்த சேவையை அனைத்து அஞ்சலகங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும் என அஞ்சல் மாஅதிபர் ரோஹன அபேரத்ன
தெரிவித்துள்ளார்.

தந்தி சேவையின்போது நிறைவேற்றப்பட்ட அனைத்து தேவைகளையும் இந்த சேவையின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ரெலி மெயில் சேவைக்காக 30 ரூபா அறவிடப்படும் எனவும் அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ரெலி மெயில் சேவையை பயன்படுத்தி தகவல் அனுப்புவோருக்கு பற்றுச்சீட்டு விநியோகிக்கப்படும் எனவும் அஞ்சல் மாஅதிபர் தெரிவித்துள்ளார்.

தந்தி சேவையை எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் நிறுத்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் ரெலி மெயில்
சேவையை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்துவதற்கு அஞ்சல் திணைக்களம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

Related Posts