யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் தமது உறவுகளுக்காகவும், உடன் பிறப்புகளுக்காகவும் விளக்கேற்றி நினைவு கூருவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை. ஆனால் அதனை அவர்கள் தமது வீடுகளில் செய்ய வேண்டும் என்றார் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை விடுதலை செய்யும் வரை ஏனைய மாணவர்கள் வகுப்புக்களைப் புறக்கணித்துள்ளனர். இதனால் கல்வி நடவடிக்கைகள் முற்றாக தடைப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பாக உங்களுடைய கருத்து என்ன? என்று அமைச்சரிடம் கேட்டபோதே அவர்
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் பல்கலை வளாகத்திலும், மாணவர் விடுதிகளிலும் விளக்கேற்றி உள்ளனர். புலிகள் இயக்கப் பதாகைகளும் காணப்பட்டன.
புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட ஓர் இயக்கம். போரின் போது கொல்லப்பட்ட புலிகளுக்காகவே இவர்கள் விளக்கேற்றி உள்ளனர். இதனை அனுமதிக்க முடியாது.
சட்டம், ஒழுங்கு எல்லோருக்கும் பொதுவானது. மாணவர்கள் இதனைக் கடைப்பிடிக்க வேண்டும்.
சட்டத்தையும் ஒழுங்கையும் மீறிய மாணவர்கள் மீதே ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்றார்.