தகவலறியும் உரிமை சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
100 நாள் திட்டத்தின் ஊடாக தகவல் அறியும் சட்டமூலம் நிறைவேற்றப்படும் என மைத்திரி அரசு தெரிவித்திருந்தது. எனினும் 100 நாள் இன்றுடன் முடிவடைகின்ற நிலையிலும் நிறைவேற்றப்படவில்லை.
இருப்பினும் தகவலறியும் உரிமை சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அந்த சட்டமூலம் அவசர சட்டமூலமாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் இன்றைய தினம் ராஜித தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.