டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி 120.10 ரூபாவாக வீழ்ச்சி

அமெரிக்க டொருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று 120.10 ரூபாவாக குறைவடைந்தது. வரலாற்றில் டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மிகக் குறைந்த பெறுமதி இதுவாகும்.
நாணயப் பரிமாற்ற வீதத்தில் இலங்கை மத்திய வங்கி தனது தலையீட்டை விலக்கிக் கொண்டதையடுத்து இவ்வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.