டெனீஸ்வரனை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கியமை தவறு! விக்னேஸ்வரனுக்கு எதிராக தீர்ப்பு!!

வட மாகாண முன்னாள் அமைச்சர் பா. டெனீஸ்வரனை முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் பதவிநீக்கம் செய்த முறை தவறு என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று கட்டளை வழங்கியது.

அத்துடன், மனுதார்ரான பா.டெனீஸ்வரனுக்கு வழக்குச் செலவை வழங்குமாறு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு மேன்முறையீட்டு நீதிமன்று உத்தரவிட்டது.

வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன், அமைச்சுப் பதவியிலிருந்து முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தன்னைப் பதவி நீக்கியமை சட்ட ஏற்பாடுகளுக்கு முரணானது என்று கட்டளையிடக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் முதலமைச்சர் விக்னேஸ்வரன், அமைச்சர்கள் அனந்தி சசிதரன், சிவநேசன் உள்ளிட்ட 7 பேர் எதிர்மனுதார்ர்களாக்க் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

இந்த மனு மீதான இறுதிக் கட்டளையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வழங்கியது.

Recommended For You

About the Author: Editor