டெங்கு, மலேரியாவை கட்டுப்படுத்த விசேட ஆய்வு நடவடிக்கை

maleriya-mosquto-denkuடெங்கு மற்றும் மலேரியா ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மலேரியா தடுப்பு இயக்கத்தின் தலைமையகத்தினால் விசேட ஆய்வு நடவடிக்கை நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணம், தெல்லிப்பளை பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மலேரியா தடுப்பு இயக்கத்தின் தலைமையகத்தைச் சேர்ந்த 9 பேர் அடங்கிய குழவினர் இந்த ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பொதுமக்கள் வாழும் பிரதேசத்தில் உள்ள நீர் நிலைகள் மற்றும் வீடுகள் என்பவற்றில் டெங்கு மற்றும் மலேரியா போன்ற நொய்களை ஏற்படுத்தக்கூடிய நுளம்புகளின் உற்பத்தி இடங்களை இனங்கண்டு அவற்றை அழிக்கும் நோக்கில் இந்த ஆய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் இந்த ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாவும் இதற்காக 9பேர் அடங்கிய குழுவினர் இந்த வேலைத்திட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக மலேரியா தடுப்பு இயக்கத்தின் விசேட ஆய்வுச் செயற்திட்ட பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor