யாழ். மாநகரசபைக்கு உட்பட்ட நல்லூர்ப் பகுதியில் டெங்கு நுளம்பு உற்பத்தியாகக்கூடிய வகையில் சூழலை வைத்திருந்து நால்வருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
பொதுச்சுகாதார பரிசோதகருடன் இணைந்து கடந்த 20ஆம் திகதி முதல் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் யாழ். மாநகர சபை எல்லைக்குள் செய்யப்பட்டது.
இதன்போது, டெங்கு பரவுக்கூடிய வகையில் சூழலை வைத்திருந்து நால்வர் இனங்காணப்பட்டு அவர்களுக்கு எதிராக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக பொலிஸார் கூறினர்.