டெங்குநுளம்பு பரவும் சூழலை வைத்திருந்த 12 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்

டெங்குநுளம்பு பரவக்கூடிய சூழலை வைத்திருந்தததாகக் கூறப்படும் 12 பேருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் கடந்த வாரம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுன்னாகம், ஏழாலை, குப்பிளான், உடுவில், இணுவில் ஆகிய பகுதிகளில் உள்ளவர்களுக்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் சுன்னாகம் பொலிஸார் நேற்று தெரிவித்தனர்.

டெங்குநுளம்பு பரவக்கூடிய சூழலை வைத்திருந்த வீட்டு உரிமையாளர்கள் மீது கடந்த இரண்டு மாதகாலமாக சுன்னாகம் பொலிஸார் வழக்கு பதிவு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor