‘டிப்ளோமா பட்டதாரிகளுக்கான வெற்றிடங்கள் இல்லை’

உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மற்றும் முகாமைத்துவ டிப்ளோமா பட்டதாரிகளுக்கான வெற்றிடங்கள் யாழ். மாவட்டத்திலுள்ள திணைக்களங்களில் இல்லையென யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், நேற்று (20) தெரிவித்தார்.

dak-suntharam-arumainayagam-GA

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மற்றும் முகாமைத்துவ டிப்ளோமா பட்டதாரிகள் 423 பேருக்கான நியமனங்கள் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சால் அண்மையில் வழங்கப்பட்டன.

அவர்களில் சிலர் யாழ். மாவட்டத்திலுள்ள திணைக்களங்களில் காணப்பட்ட வெற்றிடங்களுக்கு நிரப்பப்பட்டனர்.

மேலும் சிலர் கொழும்பு, ஆட்பதிவு திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். கொழும்பு ஆட்பதிவு திணைக்களத்தில் வெற்றிடங்கள் காணப்பட்டமையால் அங்கு அவர்களை தொடர்ந்து வேலை செய்யும்படி கோரிய போதும் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து திரும்பி வந்துள்ளனர்.

இதனால், அவர்களில் 75 பேரை முல்லைத்தீவு மாவட்டத்திலும், 30 பேரை வவுனியா மாவட்டத்திலும் மிகுதிபேரை கிளிநொச்சி மாவட்டத்திலும் நியமித்துள்ளோம்.

பெரும்பாலானவர்கள் மாவட்டங்களிலுள்ள ஆட்பதிவு திணைக்களங்களிலே பணிக்குஅமர்த்தப்பட்டுள்ளனர்’எனஅவர் மேலும் தெரிவித்தார்.