டக்ளசின் கேள்விக்கு இராதாகிருஸ்னண் பதில்

பொலனறுவை மாவட்டத்தின் தமிழ் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை கருத்தில் கொண்டு வட மத்திய மாகாண கல்வி திணைக்களம் பட்டதாரி ஆசிரியர்களை சேர்த்துக் கொள்வதற்கு இதற்கு முன் எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை என, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

ratha-daklas

நிலையில் கட்டளை 23/2இன் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்த, பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு நேற்று (05) இராதாகிருஸ்ணன் பதில் அளிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

வட மத்திய மாகாண தமிழ் பாடசாலை தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்கள்,

வட மத்திய மாகாணத்தில் பொலனறுவை மாவட்டத்தின் தமிழ் மாகாண கல்வி வலயத்திற்கு உட்பட்ட தமிழ் பாடசாலைகளில் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், வரலாறு, மொழி மற்றும் சமயப் பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்களை கருத்தில் கொண்டு வட மத்திய மாகாண கல்வி திணைக்களம் பட்டதாரி ஆசிரியர்களை சேர்த்துக் கொள்வதற்கு இதற்கு முன் எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை.

ஆதலால் மீண்டும் விண்ணப்பங்கள் கோரி தேவையான ஆசிரியர்களை உள்வாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், ஜூலை மாதம் முடிவடைவதற்கு முன் அத்தகைய ஆசிரியர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அத்துடன் கல்வியற் கல்லூரி போதனாவியல் டிப்ளோமா பட்டதாரிகளுக்கு புதிய நியமனங்களை வழங்கும் போது, வட மத்திய மாகாணத்தில் நிலவும் தமிழ் மொழி ஆசிரிய வெற்றிடங்களின் படி நியமனங்களை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ் வருடத்தில் கல்வியற் கல்லூரிகளுக்கான பயிற்சியாளர்களை இணைத்துக் கொள்ளும் போது, வெற்றிடங்கள் நிலவும் மாவட்ட செயலாளர் பகுதிகளை கருத்தில்கொண்டு நடவடிக்கை மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதனூடாக தமிழ் பாடசாலைகளுக்காக எதிர்காலத்தில் போதிய ஆசிரியர்களை பெற்றுக்கொள்வதற்கு இடமுண்டு. பட்டதாரி அல்லாத ஆசிரியர்களை ஆசிரியர் சேவை அமைப்பின் பிரகாரம் இணைத்துக் கொள்வதற்கு உத்தேசித்திருப்பதுடன், அச் சந்தர்ப்பத்தில் இது குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என்பதை தெரிவித்து கொள்கின்றேன்.

அனுராதபுரம் விவேகானந்த பாடசாலைகளில் தற்போது இஸ்லாம் சமய மாணவர்கள் 303 பேரும் இந்து சமய மாணவர்கள் 60 பேரும் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இப் பாடசாலையில் முழுமையாக ஆசிரியர்கள் 29 பேர் இருப்பதுடன் அதில் இந்து சமய ஆசிரியர்கள் 04 பேர் மட்டுமே கடமை புரிகிறார்கள். ஆதலால் இப் பாடசாலையில் அதிக இஸ்லாம் மாணவர்கள் கல்வி கற்பதால் இஸ்லாம் சமயத்தின் படி நேர அட்டவனைகள் இயங்கி வருகின்றன.

இஸ்லாம் மதத்தை சார்ந்த ஒருவர் பாடசாலை அதிபராக கடமை புரிகின்றார். இந்து மாணவர்களின் எண்ணிக்கை குறைவான போதிலும் இப் பாடசாலையில் இந்து மாணவர்களுக்கு தேவையான கல்வி வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலாக அதிபர் சேவையில் தரம் iii ல் சித்தியடைந்த எந்த ஒரு இந்து அதிபரும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இப் பாடசாலைக்கு தமிழ் மாணவர்களை அதிக அளவில் சேர்த்துக் கொள்வதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கு வடமத்திய மாகாண கல்வி செயலாளருக்கு ஆலோசனை வழங்க எதிர்பார்க்கப்படுகின்றது. (நீராவிஅடி பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை கவருவது தொடர்பாக வடமத்திய மாகாண கல்வி செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்க எதிர்ப்பார்க்கப்படுகின்றது).

Related Posts