ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்திற்கு உபகரணங்கள் கையளிப்பு

jaipurயாழ். ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்திற்கு சிலிண்டர் மற்றும் வெள்ளிரும்பு ஒட்டும் இயந்திரம் மோடிவேசன் நிறுவனத்தினால் நேற்று கையளிக்கப்பட்டது.

யாழ். ஜெய்ப்பூர் நிறுவனத்தில் நேற்று மதியம் 3.00 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வில், மோடிவேசன் நிறுவனத்தின் முகாமையாளர் எல்.எல்.துஷ்யந்தன் சுமார் 1 இலட்சம் பெறுமதியான சிலிண்டர் மற்றும் வெள்ளிரும்பு ஒட்டும் இயந்திரத்தினை யாழ். ஜெய்ப்பூர் நிறுவனத்தின் தலைவி வைத்தியர் எஸ்.கணேசமூர்த்தியிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில், இலங்கை செஞ்சிலுவை சங்க பிரதி நிதி பிலிக்ஸ் மற்றும் யாழ். ஜெய்ப்பூர் நிறுவனத்தின் செயலாளர் வைத்தியர் தெய்வேந்திரம் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர், திட்ட இணைப்பாளர், வலுவிழந்தோர் நடமாடும் உபகரணங்கள் தொழில்நுட்ப வியலாளர்கள், மற்றும் உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.