Ad Widget

ஜெனிவா பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விடயங்களும் நிறைவேற்றப்பட வேண்டும் – சுமந்திரன்

ஜெனிவா மனித உரிமைகள் ஆணையகத்தில் இலங்கை தொடர்பாக அமெரிக்காவினால் சமர்பிக்கப்பட்ட பிரேரணையில் சில பகுதிகள் நீக்கப்பட்டிருக்கின்ற போதிலும் மேலும் சில பகுதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஆகவே அமெரிக்கவின் தீர்மானித்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றங்களை தாம் ஏற்றுக் கொள்வதாகவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவினால் சமர்பிக்கப்பட்டுள்ள இந்த பிரேரண மீதான விவாதம் நிறைவடைந்த பின்னர் ஜெனிவாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வௌியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் இதனைத் தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் கூறியது போன்று பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசு முன்வர வேண்டும் என்றார்.

அமெரிக்காவின் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்றுவதற்கு எங்களுடைய முழு ஆதரவையும் நாம் வழங்க தயாராக இருப்பதோடு எங்களுடைய கருத்துக்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான தீர்வு கிடைக்கும் வகையில் இலங்கை அரசாங்கமும் உண்மைத் தன்மையுடன் செயற்பட வேண்டும் என்றார்.

இந்தப் பிரேரணையை நாம் ஏற்றுக் கொள்வதுடன் இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

Related Posts