ஜீ.ஜீ பொன்னம்பலம் அவர்களின் நினைவு தினம் குருநகரில் அனுஷ்டிப்பு

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகர் ஜீ.ஜீ பொன்னம்பலத்தின் நினைவு தினம் இன்று காலை அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

g-g-ponnampalam

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று காலை குருநகரில் உள்ள பொன்னம்பலத்தின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய விநாயகமூர்த்தி தமிழ் மக்களின் இறுதி மூச்சுவரை ஜீ.ஜீ பொன்னம்பலத்தை மறக்க முடியாது என தெரிவித்துள்ளார். மேலும் இந்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி, வடமாகாண உறுப்பினர்களான சித்தார்த்தன் , சயந்தன் ஆகியோரும், பிரதேச சபை மற்றும் நகரசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

அத்துடன் இன்று காலை 11 மணியளவில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.