ஜனாதிபதி தேர்தலில் நான் மீண்டும் போட்டியிடமாட்டேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எதிகம ரஜமஹா விஹாரையில் 28ஆம் திகதி நடைபெற்ற ஆசீர்வாத போதி பூஜையில் கலந்துகொண்டதன் பின்னர் அங்கு
கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
சகல அபிவிருத்தி நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது. இதுதான் நல்லாட்சியா, நல்லாட்சி தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி பேசுகின்றது. அதுவும் நல்லாட்சியில் இருக்கின்றது. நான், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என்று இவர்கள் சட்டத்தை தயாரிக்கின்றனர். நான், மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமாட்டேன்.
சமுர்த்தி உதவியாளர்களுக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைதுசெய்துள்ளனர். காவியுடைக்கான துணிகளை விநியோகிப்பது தவறா? எதிர்க்காலத்தில் அரச ஊழியர்கள் கடமையாற்றுவதற்கு அஞ்சுவர். இலஞ்சம் என்று கூறி யாரையும் கைது செய்யமுடியும். தயவு செய்து அவற்றை நிறுத்துங்கள் என்றும் அவர் கூறினார்.