ஜனாதிபதி தலைமையிலான வடமாகாண அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் சி.வி இல்லை

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றுவரும் வட மாகாண அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ளவில்லை.

vicky0vickneswaran

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் இந்த அபிவிருத்திக் குழுக் கூட்டம் இடம்பெற்று வருகின்ற நிலையில், இதில் முதலமைச்சர் கலந்துகொள்ளவில்லை என்று அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.