Ad Widget

ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான 53 வாகனங்கள் மீட்பு!

ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமானவை எனக் கருதப்படும் 53 வானங்கள் புறக்கோட்டைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன இவை நேற்றிவு ஸ்ரீஜெயவர்த்தனபுர களஞ்சியசாலையில் இருந்து மீரிஹான பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

vehicle

பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமானதென அதிகாரிகள் தெரிவித்தனர்.

காணாமற்போயுள்ளன ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தான 200 வானங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திபால உத்தரவிட்டுள்ள நிலையில் இவை மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts