தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் களனிகம மற்றும் தொடாங்கொடை ஆகிய இடங்களுக்கு இடையில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளன.

இதில் ஆறு மோட்டார் வாகனங்களும் இரண்டு பஸ்களும் இவ்வாறு ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளதாக கூறப்படுகிறது.

விபத்தில் 10 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும், காயமடைந்தவர்களில் மாணவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது

Related Posts