ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் 112 புதிய முறைப்பாடுகள்

காணாமற் போனோரை கண்டறியும் ஆணைக்குழு கடந்த வாரம் கிளிநொச்சி மாவட்டத்தில் சாட்சியங்களை பதிவு செய்யச் சென்ற போது புதிதாக 112 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் இந்த முறைப்பாடுகள் தொடர்பாக சாட்சியங்களை பதிவு செய்ய விரைவில் முறைப்பாளர்களுக்கு மற்றொரு தினம் ஒதுக்கப்படுமென ஆணைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.

Presidential-Commission-to-Investigate-Complaints-Regarding-Missing-Persons_3

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த வாரம் சாட்சியங்களை பதிவு செய்த போது 170 பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் 112 புதிய முறைப்பாடுகளும் கிடைத்ததாகவும் இது தொடர்பான சாட்சியங்களும் விரைவில் பதிவு செய்யப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.