ஜனாதிபதியின் யாழ். விஜயம் ரத்து

mahinda_rajapaksaதேசிய பொங்கல் விழாவில் பங்கேற்பதற்காக யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட பிரதி அரசாங்க அதிபர் ரூபினி அவர்கள் தெரிவித்துள்ளார்.

பொங்கல் விழாவில் பங்கேற்பதற்காக எதிர்வரும் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தினை மேற்கொள்ளவிருந்த ஜனாதிபதி, மழை காரணமாக தனது விஜயத்தை ரத்து செய்துள்ளார் என்று பிரதி அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் இந்த விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளதை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் ஜனாதிபதி செயலகமும் உறுதி செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருந்த ஜனாதிபதி, யாழ். வைத்தியசாலையில் புதிதான நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடமொன்றை திறந்துவைக்கவிருந்தார் என்பதும் நைனாதீவிலுள்ள தேசிய கல்வியற் கல்லூரி விழாவொன்றிலும் பங்கேற்கவிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor