ஜனாதிபதியின் பதாதைகளுக்கு கழிவு எண்ணெய் வீசப்பட்டதா?

யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவப்படங்கள் தாங்கிய பதாதைகள் கழிவு எண்ணெய் வீசப்பட்டது போல காட்சியளிக்கின்றன.குறிப்பாக பிரதான வீதியை அண்டிய பகுதியில் உள்ள பதாதைகளே இவ்வாறு கழிவு எண்ணெய் வீசப்பட்டது போல காணப்படுகின்றன.

இந்த பதாகைகளுக்கு கழிவு எண்ணெய் எவ்வாறு வீசப்பட்டது என்பது போன்ற விபரங்கள் வெளியாகவில்லை. குறிப்பாக ஜனாதிபதியின் உருவப்படங்கள் மட்டுமே குறித்த வீதியில் கழி எண்ணெய் வீசப்பட்டவாறு காட்சியளிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

mahintha_oil

Recommended For You

About the Author: Editor