ஜனாதிபதியின் பதாகை எரிப்பு

mahintha_oilயாழ். பற்றிக்ஸ் வீதியிலிருந்த ஜனாதிபதியின் பதாகை இனந்தெரியாதோரால் இன்று அதிகாலை எரிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த தருணங்களில் இவ்வாறான வரவேற்பு பதாகைகள் யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளில் வைக்கப்பட்டிருந்தன.

அவ்வாறு நீண்டகாலமாக வைக்கப்பட்டிருந்த பதாகைகளில் ஒன்றே இவ்வாறு எரியூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.