ஜனாதிபதியின் நிகழ்வுகளை புறக்கணிக்கும் கூட்டமைப்பு!

வடக்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பங்குபற்றும் நிகழ்ச்சிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிக்கும் என நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

TNA-logo

எதிர்வரும் 12,13,14 ஆகிய 3 தினங்களும் ஜனாதிபதி பங்கேற்கும் நிகழ்வுகள் வடக்கின் பல்வேறு இடங்களில் நடைபெறுகின்றது.

எனினும் குறித்த நிகழ்வுகளுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் தவிர உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அவற்றிலும் அவர்கள் பார்வையாளர்களாகவே அழைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான காரணங்களைக் கருத்திற்கொண்டு 3 நாட்களும் ஜனாதிபதி பங்கேற்கும் எந்தவொரு நிகழ்விலும் த.தே.கூ பங்குபற்ற மாட்டாது என்று தெரியவருகின்றது.

எனினும் த.தே.கூ உத்தியோக பூர்வமாக முடிவெடுத்த பின்னர் தங்கள் நிலைப்பாட்டினை வெளியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு மாகாண நேற்றய விசேட கூட்டத்திலும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதி பங்குபற்றும் நிகழ்வுகளை புறக்கணிப்போம் என்றே தெரிவித்தனர்.

எனினும் கட்சி முடிவின் பின்னர் தீர்க்கமான முடிவுகள் எட்டப்படும் என்றும் அவைத்தலைவர் சீ.வி.கே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.