ஜனாதிபதியின் இணையத்தளத்தில் ஊடுருவிய இருவருக்கும் என்ன நடந்தது தெரியுமா?

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஊடுருவி (hacking) அதிலிருந்த தரவுகளை மாற்றியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 17 வயது சிறுவன் நன்னடத்தை நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்.

மேலும், 26 வயது இளைஞர் எதிர்வரும் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இருவரும் கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிடிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Posts