ஜனாதிபதிக்கு தபாலட்டை அனுப்பும் நடவடிக்கை யாழில் ஆரம்பம்

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி ஜனாதிபதிக்கு தபால் அட்டை அனுப்பும் நடவடிக்கை நேற்று யாழில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

vijaya

முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியின் ஒரு இலட்சம் தபால் அட்டைகளை அனுப்பும் இந்த நிகழ்வின் ஆரம்ப கட்ட நடவடிக்கையை, யாழ். தபால் திணைக்களத்தில், அக் கட்சியின் பொதுச் செயலாளர் சுதர்சிங் விஜயகாந்த் ஆரம்பித்து வைத்தார்.

இதன்படி முதலாவது தபால் அட்டையை தபால் அதிபரிடம் அவர் கையளித்தார்.

இதனையடுத்து அக்கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களும் தபாலட்டைகளை அனுப்பினர்.