ஜனவரி 18 முதல் யாழ்ப்பாண சர்வதேச விற்பனை கண்காட்சி ஆரம்பம்

jitf2013எதிர்வரும் 18ஆம் திகதி முதல் யாழ்ப்பாணம் சர்வதேச விற்பனை கண்காட்சி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நான்காவது தடவையாக ஏற்பாடு செய்யப்படும் இந்த கண்காட்சி நிகழ்வு, யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது. உள்நாட்டு, வெளிநாட்டு காட்சி கூடங்களை கொண்டமையவுள்ள இந்த விற்பனை கண்காட்சியில், சுமார் 50,000 இற்கும் அதிகமானோர் இம்முறையும் பங்குபற்றுவார்கள் என ஏற்பாட்டாளர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.

இந்த விற்பனை கண்காட்சியின் பிரதான அனுசரணையாளராக டிமோ நிறுவனம் செயற்படவுள்ளதுடன், இணை அனுசரணையாளராக எலிபன்ட் ஹவுஸ் நிறுவனம் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.