ஜனவரி மாதம் 30ம் திகதிக்கு முன்னர் உயர்தரப் பரீட்சை பெறுபேறு வெளியிடப்படும்: பரீட்சைத் திணைக்களம்

எதிர்வரும் 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ம் திகதிக்கு முன்னதாக கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்கப் போராட்டத்தினால் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் கால தாமதமடைந்திருந்தது.

எனினும், தற்போது இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.