எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று அரசு இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
எனினும் தேர்தலுக்கான திகதி இன்னமும் முடிவுசெய்யப்படவில்லை என்றும் அது தெரிவித்துள்ளது.
கண்டியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடக அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
“ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது. தேர்தல் நடைபெறும் திகதி உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை இப்போது நான் உறுதியாகக் கூறமாட்டேன்.” பொதுத்தேர்தலின் போது இன, மத வேறுபாடுகளை ஒதுக்கி தேசிய நலனை முன்னுரிமைப்படுத்தி மக்கள் தமது முடிவை எடுக்கவேண்டும். தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பொதுமக்கள் ஆதரிக்கவேண்டும். – என்றார்.