சொத்து விபரங்களை வெளியிடுங்கள் ; இல்லையேல் வழக்கு தொடருவேன் – தேர்தல் ஆணையாளர்

mahinda-deshpriyaமாகாண சபையில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது சொத்து விபரங்களை வெளியிடாத விடின் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர உள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வடமேல், மத்திய மற்றும் வடக்கு மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு எதிராக இவ்வாறு வழக்குத் தொடரப்பட உள்ளது.

அதன்படி மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் சொத்து விபரங்களை வெளியிட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி அவர்கள் குறித்த காலப்பகுதியில் தமது சொத்து விபரங்களை வெளியிடாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் மாவட்ட செயலகங்களில் சொத்து விபரங்களை வேட்பாளர்கள் ஒப்படைக்க முடியும். எனினும், பலர் சொத்து விபரங்களை இன்னும் வெளியிடவில்லை.

தேர்தல் சட்டத்தை பின்பற்றாதவர்களுக்கு எதிராக எவ்வாறான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனை ஏற்கனவே பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.