சொகுசு பஸ்ஸில் கேரள கஞ்சா – இருவர் கைது

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பை நோக்கி பயணித்த அதிசொகுசு பஸ்ஸில் சுமார் 13.5 கிலோ கிராம் கேரள கஞ்சாவை கடத்தியதாக கூறப்படும் அந்த பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துநரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

கனகராயன் குளம் எனுமிடத்தில் வைத்தே இவ்விரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கஞ்சாவின் பெறுமதி 25 இலட்சம் என்று தெரிவிக்கப்படுகின்றது.