கடந்த அரசாங்கத்தின் போது அறுகம்பே மற்றும் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட சொகுசு ஜனாதிபதி மாளிகைகள் இரண்டும் ஹோட்டல்களாக மாற்றப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த மாளிகைகள் இரண்டும் ஜனாதிபதி செயலக நிதியத்திலிருந்தே நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காலியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவற்றை நிர்மாணிப்பதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதி பெற்றுக்கொள்ளவில்லை என்றும் அவற்றை நிர்மாணிப்பதற்காக 90 பில்லியன் ரூபாவுக்கு அதிகமாக தொகை செலவிடப்பட்டுள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.