தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய மடத்திலிருந்து 70 வயது மதிக்கத்தக்கவரின் சடலத்தை திங்கட்கிழமை (23) காலை மீட்டதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் கூறினர்.
ஆலய மடத்தில் தங்கியிருந்தவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்டவரின் பெயர் விபரங்கள் இன்னும் தெரிவியவரவில்லை.
சடலம் மீட்கப்பட்டு ஊறணி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர் பொலிஸார் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.