செம்மணி பாலத்திற்கு பாதுகாப்பு வேலி

men_at_work_signயாழ். செம்மணி வீதியில் திருத்தப்பட்டு வரும் பாலத்திற்கு பாதுகாப்பு குறியீடுகள், பாதுகாப்பு வேலி என்பன போடப்பட்டுள்ளன.

பாதுகாப்பு குறியீடுகள் மற்றும் பாதுகாப்பு வேலிகள் என்பன அமைக்கப்படாமையினால் கடந்த வாரம் குறித்த வீதியில் விபத்து ஏற்பட்டு இருவர் உயிரிழந்தனர்.

இதனையடுத்தே மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கு இந்த பாதுகாப்பு குறியீடுகள் அவசர அவசரமாக போடப்பட்டுள்ளது.

இதேவேளை, வீதிகளில் திருத்த வேலைகளில் ஈடுபடும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மக்களை விழிப்புணர்வு ஏற்படாத வகையில் செயற்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்து கருணாரத்ன தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

வீதித்திருத்தத்தில் ஈடுபடும் திணைக்களங்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை !

Recommended For You

About the Author: Editor