முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சொலை சிறுமிகள் இல்லத்தின் மீது கடந்த 2006ஆம்ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் திகதியன்று ஸ்ரீலங்கா விமானப்படையினர் நடாத்திய குண்டுத் தாக்குதலில் பாடசாலை மாணவிகள் 61 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் 129 பேர் காயமடைந்திருந்தனர்.
மேற்படி சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.
மேற்படி நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு படுகொலைக்கு நீதிகோரியும் உயிரிழந்த மழலைகளின்ஆத்மசாத்திக்காகவும் பிரார்த்திக்கும் வண்ணம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் அழைப்பு விடுகிக்கின்றனர்.
திகதி: 14-08- 2016 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: பி.ப 3.30 மணி
இடம்: யாழ் முனியப்பர் கோவிலடி (யாழ் கோட்டைக்கு அருகில்)