சு.க.வின் வேட்பாளர்களுக்காக அமைச்சர் மேர்வின் யாழில் பிரசாரம்

mervin-visttojaffnaயாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா இன்று சனிக்கிழமை வடமாகாண சபைத் தேர்தலில் சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டார்.

நயீனாதீவு நாகவிகரைக்குச் சென்ற அமைச்சர் அங்கு வழிபாடுகளை மேற்கொண்டு காலை 10.00 மணிக்கு யாழ்.நகருக்கு வருகை தந்ததுடன் யாழின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆதரவு திரட்டும் பணியை மேற்கொண்டார்.

முதலில் காஸ்தூரியர் வீதியூடாக பேரூந்து நிலையத்திற்கு சென்று வைத்தியசாலை வீதியுடாக தனது ஆதரவு திரட்டும் பணிகளை மேற்கொண்டார்.

இதேவேளை, யாழ். நகர் சத்திரத்து சந்தி மற்றும் நாவாந்துறை பகுதியில் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த பயணத்தில் சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள், இராணுவத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் யாழ்.நாவந்துறைப் பகுதியில் சுதந்திரக் கட்சியின் யாழ்.நகர அலுவலகத்தையும் அமைச்சர் மேர்வின் இதன்போது திறந்து வைத்தார்.

தொடர்புடைய செய்தி

யாழில் மேர்வின் சில்வா!