சுவிஸ் அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சினுடைய சமஷ்டி தொடர்பான திணைக்களத்தின் சிரேஷ்ட ஆலோசகர் Martin Stuerzinger இற்கும் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஆளுநர் அலுவலகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) நண்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, வடக்கு மக்களின் தற்போதைய நிலைகுறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், மக்களை பொருளாதார ரீதியில் மேம்படுத்தக்கூடிய வழிமுறைகள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.
வட மாகாணத்தில் நிலவும் காணி, நீர், வீடு மற்றும் இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் குறித்தும் இதன்போது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டிருந்ததாக வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.