சுவிஸர்லாந்து நாட்டின் ஸ்ரீலங்கா மற்றும் மாலைதீவுக்கான தூதுவர் கைன்ஸ் வோக்கர் நெடகோனுக்கும், வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரனுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பு இன்று முற்பகல் 11 மணியளவில் வடக்கு முதலமைச்சரின் கைதடியிலுள்ள அமைச்சில் இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின்போது, தூதுவர் கைன்ஸ் வோக்கர் நெடகோனுடன் சுவிஸர்லாந்து நாட்டுப் பேராசிரியர் ரட்லரும் கலந்துகொண்டிருந்தார்.
இந்தச் சந்திப்பு தொடர்பாக கருத்துத் தெரிவித்த வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன், பொருளாதார ரீதியாக மத்திய அரசாங்கத்துக்கும் மாகாண அரசாங்கத்துக்கும் எவ்வாறான உறவுகள் இருக்க வேண்டும் என்பது தொடர்பாகவும், சிறுபான்மை இன மக்களுக்கு முன்னுரிமை கொடுப்பது தொடர்பாகவும் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டதாகத் தெரிவித்தார்.