யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ள எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் மற்றும் பொது மக்களின் பிரதிநிதிகளை சந்தித்து வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரனுடனான சந்திப்பு நேற்று காலை 10 யாழில் உள்ள பிரபல விடுதி ஒன்றில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, ரவி கருணாநாயக்க, சுவாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தச் சந்திப்பு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவிக்கையில், ‘இந்தச் சந்திப்பில் யாழ் மாவட்டத்தின் தற்போதைய நிலவரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக அவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவம் அரசாங்கத்தின் அரசியல் அங்கமாகவே இன்று செயற்பட்டு வருகின்றர்கள். அரசாங்கத்திற்கும் ஆளும் கட்சிக்கும் தேவையான வற்றை செய்துகொண்டு இவ்வாறானதொரு நிலையில் வட மாகாண சபைத் தேர்தல் ஜனநாயக வழியில் நடைபெறும் என்று எதிர்பார்க்க முடியாது.
அண்மையில் கூட வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் 6,500 மேற்பட்ட காணிகள் சுவிகரிக்கப்பட்டுள்ளது இதனால் 7,500 குடும்பங்களைச் சேர்ந்த 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் மீளக்குடியேற முடியாத நிலையில் வாழந்து வருவதாக எடுத்துக் கூறியுள்ளதாக’ அவர் தெரிவித்தார்.
இடம்பெயர்நதவர்கள் உடனடியாக அவர்களின் இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும் இதற்கு இராணுவம் அவர்களின் காணிகளில் இருந்து வெளியேறவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள போதும் தொடர்ச்சியாக இராணுவம் நில ஆக்கிரமிப்பை மேற்கொண்டு வருகின்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வடக்கில் இராணுவம் அரசாங்கத்தின் அரசியல் அங்கமாக செயற்பாட்டு வருகின்றது ஆளும் கட்சிக்கும், அரசாங்கத்திற்கும் எது தேவையானதோ அதனையை இன்று இராணுவம் செய்து வருகின்றது.
இவ்வாறான நிலையில் வடக்கில் ஒரு ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்க முடியாது இந்த விடயத்தை ஐக்கிய தேசிய கட்சி கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் கேட்டுள்ளதாக சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.
நேற்று மாலை வடமாரட்சியில் பகுதிக்கு விஜயம் செய்த ரணில் விக்கிரமசிங்க வடக்கு மாகாண தேர்தல் தொடர்பில் பொது மக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதனை போது வடக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடுவதன் நோக்கம் மற்றும் தற்போதயை பொருளாதார நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடியுள்ளதுடன் இந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு தகுதியான வேட்பாளர் ஒருவரை தேர்ந்தெடுக்குமாறும்’ கேட்டுக்கொண்டார்.