சுரேஷ் எம்.பியின் வாகனம் மோதியமையினால் இருவர் காயம்

accidentநாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பயணித்த வாகனம் மோதியமையினால் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

வடமாராட்சி பகுதியில் இருந்து பருத்தித்துறை வீதியால் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்தபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனத்தின் மீது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியமையினாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் காயமடைந்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor