சுருக்கிட்டு தொங்கிய நிலையில் இளம் யுவதி சடலமாக மீட்பு!- திருநெல்வேலியில் சம்பவம்

girl-hanging-rope-suicideயாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி ஒருவர் அவரது வீட்டிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை 10:00 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி காலாசாலை வீதியை சேர்ந்த 19 வயதுடைய சோமசுந்தரம் தர்மிளா என்பவரே இவ்வாறு சுருக்கிட்டு தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரது வீட்டிலுள்ளோர் அயலில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த போது தனியே இருந்த குறித்த பெண் வீட்டின் கூரையில் சேலையினால் சுருக்கிட்டு தூக்கில் தொங்கியுள்ளார்.

இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்றும், இது தற்கொலையா அல்லது கொலையா என்பது பற்றியும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

Recommended For You

About the Author: Editor