சுயேட்சைக் குழுவின் வேட்பாளர் சடலமாக மீட்பு

body_foundவடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள சுயேட்சைக் குழுவின் வேட்பாளர் ஒருவர் சுன்னாகத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சுயேட்சைக் குழுவில் போட்டியிடும் வைத்திலிங்கம் இராமச்சநதிரன் (வயது 73) என்பவரே இவ்வாறு சடலமாக இன்று சனிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளார்.

சுன்னாகம், புகையிரத நிலைய வீதியில் சிறிய கோயில் ஒன்றில் இருந்தே இவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மனைவியினால் அடையாளம் காட்டப்பட்டுள்ளது.தற்போது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை சடலமாக மீட்க்கப்பட்டவர் கடந்த இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக மனைவி பிள்ளைகளை பிரிந்து தனிமையில் வாழந்து வந்துள்ளார். வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்க்காக சுயேட்சையாக கட்டுப்பணம் செலுத்தியுள்ளதுடன் அவருக்கு பாம்பு சின்னமும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.