சுயேட்சைக்குழுவின் ஆதரவாளர் மீது வாள் வெட்டு

knife2bwith2bblood-11வட்டுக்கோட்டை பகுதியில் சுயேட்சைக்குழுவொன்றின் ஆதரவாளர் இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டுக்கிலக்காகிய நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் வட்டுக்கோட்டையை சேர்ந்த குலசேகரம் லவன் என்பவர் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.