சுயதொழில் கடனுதவிக்கு முன்னாள் போராளிகள் விண்ணப்பம்

loansமுன்னாள் போராளிகளுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு கடனுதவிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து 1,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக யாழ். மாவட்ட முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு வேலைத்திட்ட அதிகாரி மேஜர் ஜகத் குமார தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் 3,500 முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன், இணைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் 2500 பேரின் விபரங்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதேவேளை, முன்னாள் போராளிகளின் நல வாழ்வு வேலைத்திட்டத்தின் கீழ். சுயதொழில் கடனுதவிக்கு 1000 பேர் விண்ணப்பித்த நிலையில், தற்போது 500 பேருக்கு சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா இலகு வட்டி வீத அடிப்படையில், வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏனையோருக்கு மூன்றாம் கட்டமாக அவர்கள் விரும்பிய தொகை கடனுதவிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இக்கடனுதவிகள் விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், முன்னாள் போராளிகள் சுயதொழில் கடனுதவிக்கு விண்ணப்பிப்பதற்கு யாழ். மாவட்ட செயலக புனர்வாழ்வு வேலைத்திட்ட அலுவலகத்திற்கு வருகை தரும்பொழுது, புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து வெளியேறி அத்தாட்சி பத்திரம் உட்பட ஆள் அடையாள அட்டை, குடும்ப அட்டைகள், வதிவிட அட்டைகளை கொண்டு வருமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor