சுயதனிமைப்பட்டார் யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன்!

யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் சுயதனிமைப்பட்டுள்ளார். அவருடன் நெருங்கிப் பழகிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

வி.மணிவண்ணனின் நெருங்கிய நண்பர் ஒருவரின் திருமண நிகழ்வு கடந்த 20ஆம் திகதி பருத்தித்துறையில் நடந்தது. அதில் மணிவண்ணனும் கலந்து கொண்டார்.

அந்த நண்பருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து, தன்னை சுயதனிமைப்படுத்திக் கொண்ட வி.மணிவண்ணன், இன்று காலை பிசிஆர் சோதனை செய்தார்.

இதனால், இன்று மாநகரசபை அமர்வு நடைபெறவிருந்த நிலையில், பிற்போடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor