சுன்னாக விபத்தில் இருவர் காயம்!

accidentசுன்னாகம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் தெல்லிப்பளை மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலைகளில் புதன்கிழமை (23) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் வியாழக்கிழமை (24) தெரிவித்தனர்.

சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதியைச் சேர்ந்த 49 வயதுடைய கருனாநந்தம் விஜயேந்திரன், அவரது மகனான 9 வயதுடைய விஜயேந்திரன் துசாந்த ஆகிய இருவருமே இவ்விபத்தில் படுகாயமடைந்தனர்.

வியாபார நிலையம் ஒன்றில் இருந்து, பிரதான வீதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் படுகாயமடைந்த இருவரும் முதலில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிகப்பட்ட போதும், மகன் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இவ்விபத்து தொடர்பிலான விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.