சுன்னாகம் பொலிஸாரினால் துண்டுப்பிரசும் விநியோகம்

sunnakam-policeசுன்னாகம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவினரால் வீதிப் போக்குவரத்து தொடர்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக விசேட விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி பண்டார தலைமையில் இந்த விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அண்மைக் காலமாக யாழ். மாவட்டத்தில் வீதி விபத்துக்கள் காரணமாக மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலைகள் மற்றும் பொது இடங்கள், சந்தை போன்ற இடங்களில் வீதி விபத்துக்களில் இருந்து பாதுகாப்பது தொடர்பாக துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இந்த துண்டுப்பிரசுரத்தில் இரவு நேரங்களில் டைனமோ இன்றி பயணித்தல், கறுப்பு உடைகள் அணிந்தவாறு பயணிப்பது போன்றவற்றால் ஏற்படக்கூடிய விளைவுகள், வீதியில் எவ்வாறு பயணிப்பது, விபத்தை தடுப்பது எவ்வாறு போன்ற விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor