சுன்னாகத்தில் ரயில் மோதி வயோதிபர் பலி

சுன்னாகம் பிரதேசத்தில் ரயில் மோதி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ரயில்வே கடவையைக் கடக்க முயன்ற போதே வயோதிபர் மீது ரயில் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் ஆலடி பகுதியைச் சேர்ந்த சின்னராசா என்ற முதியவரே புகையிரதத்துடன் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் சுன்னாகம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts