சுன்னாகத்தில் தொலைத்தொடர்பு பாதிப்பு

no-phoneline-neededசுன்னாகத்தில் வீதி மதகு திருத்துவதினால் அப்பகுதிக்கான தொலைத்தொடர்பு இரண்டு நாட்களாக செயலிழந்துள்ளது.

சுன்னாகம் சந்தியில் உள்ள மதகு திருத்துவதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை பைக்கோ இயந்திரத்தினால் கிடங்கு தோண்டப்பட்டது.

இதனால் நிலத்தின் கீழ் பொருத்தப்பட்டிருந்த தொலைத்தொடர்பு இணைப்பு வயர்கள் அறுக்கப்பட்டு தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாக தொலைத்தொடர்பு திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தள்ளார்.

இதனால் சுன்னாகம் நகரத்திலுள்ள வங்கிகள், நிறுவனங்களுடைய சேவை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.