Ad Widget

சுன்னாகத்திலுள்ள குடிநீர்க் கிணறுகளில் கழிவு எண்ணெய் கலப்பு

யாழ். சுன்னாகம் மின்சார நிலையப் பகுதியில் உள்ள குடிநீர் கிணறுகளில் கழிவு ஒயில் புகுவதினால் சுத்தமான குடி நீரைப் பெற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.கடந்த பல வருடங்களாக கழிவு ஒயில் கிணறுகளில் புகுவது சம்பந்தமாக பிரதேச சபை, பிரதேச செயலகம், பொது சுகாதார வைத்தியதிகாரி பணிமனை உட்பட பல இடங்களில் முறைப்பாடு செய்தும், உடனடியாக நிலமையை உணர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இது வரைக்கும் இலங்கை மின்சார சபைக்கு பலமுறை அறிவித்திருந்தும் மாற்று நடவடிக்கைகள் எவையும் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் எதுவும் மேற் கொள்ளப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விடயத்தில் அரச அதிகாரிகளின் அசமந்தப்போக்கும் அதே வேளை உரிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டா வெறுப்பான நடவடிக்கைகளும் இன்று பொது மக்களின் குடிநீருக்குரிய கிணறுகளில் பாதிப்பை உண்டாக்கியுள்ளது.

Related Posts