Ad Widget

சுனாமியை நினைவூட்டும் டிசம்பர் மாதம்: மீண்டும் மீண்டும் இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்

இந்தோனேஷியாவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்தோனேஷியாவின் உள்ள போர்னியோ தீவுப்பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால், பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக தகவல் ஏதும் இல்லை. சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 6.1 என்றளவில் கிழக்கு இந்தோனேஷியாவில் கடலை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு சில மணி நேரங்களில் 6.2 ஆக ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

Related Posts