சுதுமலையில் பெண் கொலை, நகைகள் கொள்ளை

dead-footயாழ்.சுதுமலை வடக்குப் பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று சனிக்கிழமை (14) அதிகாலை பெண்ணொருவரைக் கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த மற்றும் வைத்திருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் குமாரலிங்கம் பத்மாவதி (56) என்ற பெண்ணே கொலை செய்யப்பட்டவராவார்.

இது பற்றித் தெரியவருவதாவது,

மேற்படி பெண் கொழும்பில் வசித்த நிலையில், சுதுமலை அம்மன் ஆலயத்திருவிழாவிற்காக யாழ்ப்பாணம் வருகை தந்து, சுதுமலை வடக்கிலுள்ள தனது சொந்த வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் பெண்ணுடன் தங்கியுள்ளார்.

நேற்று (13) இரவு ஆலயத்திருவிழா முடிந்து வீட்டில் இவர்கள் இருவரும் உறங்கிக் கொண்டிருந்த போது, இன்று (14) அதிகாலை வேளையில் வீட்டின் கூரையினைப் பிரித்து உள்நுழைந்து வீட்டிலிருந்து இரண்டு பெண்களையும் கை, கால்களையும் கட்டிவிட்டு அவர்கள் அணிந்திருந்த மற்றும் வீட்டிலிருந்த நகைகளைத் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் வீட்டு உரிமையாளரான (பத்மாவதி) பெண்ணின் வாயினை துணியால் கட்டியமையினால் அவர் மூச்சுத் திணறி இறந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் நீதவான் முன்னிலையில் சடலத்தினை மீட்பு யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts